
லூசிபர் சூப்பரான படம். மோகன்லால் நடித்தது.பிருத்விராஜ் இயக்கியது.
தமிழ் நாட்டிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
கேரளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் புதிதாக ஒரு போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
அதில் போலீஸ் அதிகாரியின் நெஞ்சின் மீது லால் காலை வைத்து உதைப்பது போல இருக்கிறது.படத்தைப் பாருங்கள் தெரியும்.
அந்த போஸ்டரில் லால் கேட்பது மாதிரி ஒரு வாசகம்.
“எப்படிடா என் பசங்களை தொடப்போச்சு?”
இந்த போஸ்டருக்கு லாலின் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இணைய தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஆனால் கேரளா போலீஸ் அசோசியேசன் கடுமையுடன் கண்டித்து முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறது.












