
தமிழ்த் திரைப்பட உலகத்தில் இருக்கிற, விரல் விட்டு எண்ணக்கூடிய போராளிகளில் இயக்குநர் சேரன் ஒருவர். இன,மான உணர்வுகளுக்கு இன்னல் எத்திசையில் இருந்து வந்தாலும் அத்திசை நோக்கி ஏவுகணையாய் பாய்கிற மீன் கொடி நாட்டின் மானமிகு தமிழன். புதுமையைப் படைக்க விரும்புகிற அந்த இயக்குநர் மக்கள் நீதி மையம்,நாம் தமிழர் இயக்கம் ஆகிய அரசியல் இயக்கங்கள் பெற்ற வாக்குகள் பற்றி தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.
“மநீம 16.5லட்சம், நாம் தமிழர் 16.0லட்சம் ஓட்டுக்கள் வாங்கி 32.5லட்சம் மக்கள் தமிழகத்தில் அரசியல்மாற்றம் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்கள். 39தொகுதிகளில் 27இடங்களில் நாம்தமிழர் கட்சி மநீமவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 12இடங்களில் மநீம அதிக வாக்குகள் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்.














