![]()
கரன் ஓபராய் .இந்தி நடிகர்,பாடகரும் கூட!
ஒரு பெண்ணை ஆசை காட்டி கற்பழித்து மிரட்டியதாக தொடரபட்ட வழக்கில் அண்ணன் ஜெயிலில் இருக்கிறார். ஜாமீனும் மறுக்கப்பட்டதால் அவர் தனது ஆட்களை விட்டு அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார்.
காலையில் அந்தப் பெண் வாக்கிங் செல்கையில் பைக்கில் வந்த இருவர் பெண்ணின் தோள் பட்டையில் கூரிய பொருளால் கீறி ஒரு பேப்பரை வீசி இருக்கிறார்கள்.கையில் இருந்த பாட்டிலைக் காட்டி சொன்னபடி செய்யாவிட்டால் ஆசிட் வீசுவோம் என எச்சரித்திருக்கிறார்கள்.
அந்த பேப்பரில் “கேசை வாபஸ் வாங்கு” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.












