
வதந்திகளுக்கு மட்டும்ஏன் வாய் வலிப்பதில்லை.?
வள்ளல் மாதிரி வாரி வாரி வழங்கும் சக்தி வதந்திகளுக்கு மட்டுமே இருக்கிறது.
அதுவும் சினிமாவில் கிளம்புகிற வதந்திகள் சிக்கென மக்கள் மனதில் ஒட்டி விடுகின்றன.
அப்படித்தான் ஒரு வதந்தி.!
தளபதி விஜய்யுடன் திரிஷா இணைகிறார் என்பதாக ஒரு வதந்தியை பிரபல நிறுவனமே கிளப்பி விட்டது.
அதை நம்பி சிலர் செய்தியும் எழுதி விட்டார்கள்.
ஆனால் லோகேஷ் கனகராஜின் படத்தில் விஜய் கன்பர்ம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.
மற்றபடி திரிஷா இணைகிறார் என்பதெல்லாம் கற்பனை என்கிறது தளபதி வட்டாரம்.












