மகாராஷ்டிர மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றுகிறவர் நிதி சவுத்ரி.பாஜக ஆதரவு அதிகாரி.
தேசப்பிதா என்று அரசாங்கமே கொண்டாடுகிற காந்தி அடிகளைப் பற்றி கடுமையான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
“மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை யொட்டி எதற்காக கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும்? காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டிய நேரம் இதுதான்! ( பாஜக முழு மெஜாரிட்டியின் பலன் இதுதானோ?) , உலகில் உள்ள காந்தியின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் , காந்தியை சுட்டு கொலை செய்த கோட்சேவுக்கு நன்றி” என்றும் தெரிவித்திருந்தார்.