
எல்லா ரோடும் ரோம் நகருக்கு போகுதுன்னு சொன்ன மாதிரி ஆல் ஆர்ட்டிஸ்ட் அட்டாக்கும் விஷால் மீதுதான்.
இதில் இயக்குநர் சேரன் நம்பர் ஒன் ஷூட்டர்.! எல்லாமே புல்ஸ் அய்ஸ்! சல்லடையாக விஷாலின் இமேஜ் தொங்குகிறது.
சேரனின் வாள் வீச்சு இனி!
“தலைமையை தேர்வு செய்ய ரொம்பவும் யோசிக்கிறோம். முடிவில் தப்பான ஒரு ஆளை அரசியலிலும் சரி சங்கத்திலும் சரி தேர்வு செய்து விடுகிறோம்.
இந்த முறையாவது நடிகர் சங்கத்துக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நல்ல தலைமையை தேர்வு செய்யணும்.அப்பத்தான் சினிமாவை காப்பாத்த முடியும்.!
தப்பான ஆளை உக்கார வச்சதால 25 வருஷம் பின்னோக்கி போயாச்சு.எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம்னா.அப்புறம் எதுக்கு தயாரிப்பாளர் சங்கம்?
இதுக்குத்தாம் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் பதவிக்கு வரணும் என்பது.! தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுபவம் இல்லாத ஆளை உக்கார வச்சதால் பெரிய பிரச்னையை பார்த்தாச்சு. சிந்திக்கத்தெரியாத ஆளை உக்கார வச்சதால் நாமதான் கஷ்டப்பட்டோம். நாம்ப முதலீடு செய்த பணத்தை எடுக்க வேணும்னா திறமைசாலியான ஒரு நல்லவரை அந்த பதவியில உட்கார வைக்க வேண்டும்.
இதுக்கு பாரதிராஜா சார் வழி சொல்லணும். !
அவரே வந்து உட்காரனும்.!
சூழ்ச்சி செய்து அவரை டைரக்டர்ஸ் யூனியன் தலைவராக்கிட்டாங்க.அந்த யூனியனை நாங்க பார்த்துக்கிறோம். தயவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பாரதிராஜா சார் வந்து உட்காரட்டும்.நடிகர் சங்கத் தலைவராக பாக்யராஜ் சார் உட்காரட்டும்.இது நடந்தால் இரண்டு வருசத்தில் தமிழ்ச்சினிமாவில் நல்ல மாற்றம் வரும்.












