விஜய்யின் 45வது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத் தரப்பு வெளியிட்டது. அதில், அப்பா – மகன் என விஜய்யின் இரு வேறு தோற்றங்கள் இடம் பெற்று இருந்தது.
அதில் அப்பா விஜய் மீன் வியாபாரி போலவும்,மகன் விஜய் கால் பந்து வீரர் போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாவது லுக்கும் வெளியானது. இதில் அப்பா,மகன் என இரு தோற்றங்களும் இடம் பெற்று இருந்தது. விஜய் ரசிகர்கள் மத்தியில் இப் போஸ்டர்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது.
இதில் அப்பா விஜய்யின் காட்சிகள் மதுரையில் நடப்பது போலவும் மகன் விஜய் சம்பந்தப்பட்டகாட்சிகள் சென்னையில் நடப்பது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.