
“மாப்ளே…வெச்சுட்டான்யா ஆப்பு” என்று வடிவேலு மாதிரியான கலக்கத்தில் இருக்கிறது அரசு. வீணாக சிலரின் தப்பான யோசனையைக் கேட்டு தேர்தலுக்கு தடை விதிக்கச்சொன்னது பூமராங் மாதிரி ஆகிவிட்டதே என சில அமைச்சர்கள் கலங்கிப் போய் இருக்கிறார்கள்.
தேர்தலில் விஷாலை குறிவைத்து இயங்கியவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கக்கூடும். இதைவிட்டு விட்டு மொத்தமாக நடிகர் சங்கத்தையே விழுங்கப்பார்த்தார்கள். அவர்களை விழ வைத்துவிட்டது நீதி மன்றம்.
“ஏற்கனவே ஒன்பது மாதம் லேட். இதில் மேலும் தேர்தலை தள்ளிப்போடுவதன் நோக்கம் என்ன?தற்போதைய நிர்வாகிகளுக்கு அதிகாரம் இல்லேன்னா ஒரு குழுவை போட்டிருக்கலாமே? ஒரு தேர்தலை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது தெரியாதா,எவ்வளவு செலவாகும் என்பதும் தெரியாதா ?அரசு அந்த செலவை ஏற்குமா?”என்று நீதிபதி கேட்டிருக்கிறார்.
“எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்குப் பதிலாக ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானம்,அல்லது மைலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடத்தி கொள்கிறோம்.அனுமதி கொடுங்கள் ” என விஷால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
“இந்த தேர்தல் நடக்கவே நடக்காது “என்று இளையவேள் ராதாரவி,’அல்வா’ எஸ்.வி.சேகர் இருவருமே தொடக்கம் முதலே சொல்லி வந்தார்கள்.
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக நடிகர் சங்கம் சார்பில் தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி பத்பநாபன் அறிவித்திருந்தார்.
|
|












