“3000 ஓட்டுகள் கொண்ட தேர்தலுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பது சந்தோசமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. இங்கு அனைவரும் ஒரு குடும்பம். அதில் ஒரு சிலருக்கு தபால் ஒட்டு இல்லாமல் போனது வருத்தத்துக்குரியது. அதில் யாரும் எந்த ஒரு சூழ்ச்சியும் பார்க்க வேண்டாம் அது தபால் துறையின் பிழையும், தாமதமும் என்றே சொல்லலாம் .” என்று உலகநாயகன் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
“அடுத்த முறை அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . நண்பர் ரஜினியின் ஓட்டு அனைத்து உறுப்பினர்களின் ஓட்டைப் போல மிகவும் முக்கியமான ஒரு ஓட்டு. அது விழுந்திருக்கவேண்டும் அவரும் மிக ஆர்வமாக இருந்தார், அது நடக்கவில்லை என்பது வருத்தத்துக்கு உரியதுதான். அடுத்த முறை இதுபோன்று நிகழாமல் தடுக்கப்படவேண்டும்.
வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர் சங்க பெயர் மாற்றம் என்பது பெரும்பான்மையானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்து பார்த்துக்கொள்ளலாம்.
இந்த தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் இருக்கக்கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்” என்று கமல் கூறி இருக்கிறார்.