“ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம்,நேத்து வந்தவ நெல்லுக் குத்துறாளாம்”னு ஒரு பழமொழி.
அது மாதிரித்தான் ஆகிப்போச்சு .
‘கொலையுதிர்காலம்’ பட முன்னோட்ட விழா நகரின் முக்கிய நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
இந்த விழாவுக்கு வழக்கம்போல நயன்தாரா வரவில்லை. கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர் நயன் .அந்தப் படத்தை விளம்பரப்படுத்துகிற நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.
இதை தயாரிப்பாளர் சங்கமோ,நடிகர் சங்கமோ கண்டு கொள்வதில்லை. கண்டிப்பதுமில்லை.தண்டிப்போம் என சொல்வதுமில்லை.
இதனால் ஜெய் போன்றவர்கள் கூட வருவதில்லை.
“தல’அஜித்தே வரவில்லை.அவரைக் கேட்பதுதானே “என பதில் சொல்லி சங்கங்களை அடக்கி விடுகிறார்கள்.
ஆக நடிகர்களை தட்டிக்கேட்கும் அளவுக்கு இங்கு சங்கங்கள் இல்லை. நபும்சகர்களைப் போலவே இருக்கின்றன.
இந்த நிலையில்தான் கொலையுதிர்காலம் பட விழாவில் கலந்து கொண்ட ராதாரவி அவரது பாணியில் பேசிவிட்டுப் போய் விட்டார்.
அது நயன்தாராவை ஆழமாக குத்திவிட்டது.
ரவி அப்படி என்னதான் பேசினார்?
“எம்.ஜி.ஆர்.சிவாஜி போன்றவர்கள் லெஜண்ட்ஸ். சாகாவரம் பெற்றவர்கள்.
நயன்தாரா நல்ல நடிகை. இவ்வளவு நாள் சினிமாவில் தாக்குப்பிடித்து நிற்பதே பெரியவிஷயம்.
அவரைப் பற்றி வராத நியூசே இல்ல.
இதெல்லாம் தாண்டி நிக்கிறார்.
நயன் ஒரு படத்தில் பேயாக நடிக்கிறார்.இன்னொரு படத்தில் சீதாவாக நடிக்கிறார்.
இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் .முன்னெல்லாம் சீதாவாக நடிக்க கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள்.
இப்போதெல்லாம் பார்த்தால் கும்பிடத் தோன்றுகிறவர்களும் நடிக்கலாம் அதற்கு நேர்மாறாக இருப்பவர்களையும் கூப்பிடலாம்” என பேசிவைட்டார்.
இந்த பேச்சு தன்னை வெகுவாக பாதித்து விட்டது என்று நயன் பொங்கி விட்டார்.
“நடிகர் சங்கத்துக்குப் பணிவான கேள்வி. உச்ச நீதிமன்றம் சொன்னதைப்போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா?”என கேட்டார்.அவர்களும் ஒரு குழு அமைத்துவிட்டார்கள்.
ஆனால் நயன்தாரா உள்ளிட்ட பெரிய நடிகைகள் எவருமே ஓட்டுப் போடவில்லை. அவர்கள் பெரும்பாலும் வெளிமாநில நடிகைகள்.சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள்.
வராத முக்கிய நடிகர்களில் சிம்பு முக்கியமானவர்.