இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ்ச்சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை.
இதுவரை 69 படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இயக்கியுள்ள படத்தின் பெயர் இன்றுதான் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
இவரது எழுபதாவது ( கடைசி )படத்தின் பெயர் கேப்மாரி. நாயகன் ஜெய். இந்தப் படத்துடன் இயக்குநர் ஒய்வு பெறுகிறார்.
இதுநாள் வரை நல்ல பெயர்களாக படங்களுக்கு வைத்திருந்த சந்திரசேகர் இந்த படத்துக்கு ஏன் இப்படி ஒரு தமிழ் அல்லாத பெயரை வைத்தார் என்பதற்கு அவர் சொன்ன எந்த காரணமும் பொருந்தவில்லை என்பதால் காரணங்களை ஆராய வேண்டிய அவசியமில்லை. சென்னையில் புழக்கத்தில் இருக்கிற மெட்ராஸ் பாஷை
தளபதி விஜய்யின் தந்தைக்கு கேப்மாரி என்கிற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது போயிருக்குமா?
கேப்மாரி அல்லது கேப்பமாறி இரு சொல்லுக்கும் தமிழ் லெக்சிகன் சொல்லும் பொருள்.
கேப்மாரி: திருடன்.
கேப்பமாறி: மாவட்டங்களில் திருடுகிற தெலங்கச்சாதியாரை குறிக்கும்.
எஸ்.ஏ.சி.இயக்கி இருக்கிற படத்தின் கதை இளவட்டங்களின் இன்றையக் காதலைக் குறிக்கும் என்பது.துள்ளலான காதல் கதை கவர்ச்சி மிக்கது. இத்தகைய கதைக்கு கேப்மாரி எப்படி பொருந்துகிறதோ?
இன்னும் சில மோசமான சொற்கள் புழக்கத்தில் உண்டு.
பிள்ளைகளை செல்லமாக படவா என கொஞ்சுகிறவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சொல்.
அது படுவா என்பதில் இருந்து மருவி வந்திருக்கிறது.