“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்று பாரதியே சொல்லிட்டாண்டி..நமக்கெதுக்குடி வாங்க நாற அடிக்கலாம்” என்று வனிதா அண்ட் கம்பனியை எறக்கி விட்டிருக்கு பிக்பாஸ் டீம்.
அவங்க கொடுத்த ஸ்கிரிப்ட்க்கு மேலே எக்ஸ்டிராவாக வசனமெல்லாம் பேசி கூவத்தை கொண்டாந்து விட்டாச்சு.
தயவு செய்து சிறுவர் சிறுமியர்,கல்யாணமாகாத பெண்கள் யாரும் பிக்பாஸ் பார்க்க அனுமதிக்காதீர்கள். கெட்டுப் போவார்கள்.
“அக்கிஸ்ட் எல்லாம் கும்பலா குந்திக்கினு நாறிக்கினு கெடக்குக.அப்பால போனா அல்லக்கை ஒண்ணு செப்பல் பிஞ்சிரும்னு பேஜார் பண்ணுது. இந்தாண்ட வந்த ஒரு குஜிலி மூஞ்சி மொகர எல்லாம் பேந்துரும்னு பிலிம் காட்டுது. ஷோவா காட்டுறானுக. பசங்க கெட்டுப்பூடுவானுக மாமே! பிக்பாஸ்னா கலிஜ்னு மீனிங் ஆயிடிச்சு.. யக்கோவ்.. .ஊருனாட்டான் மாரி அந்த பொட்டியாண்டைய குந்திண்டு கெடக்காதே.பசங்கள வலிச்சிக்கினு வந்துரு.புரிதா?
டொம்மையாட்டம் கீதேன்னு நென்ச்சா அது இன்னா பேச்சுப் பேசுதுன்றே! சதி சாவித்திரி மாதிரி மாஸ்க் மாட்டிண்டு பேசுராலுகன்னு கோ ஆர்ட்டிஸ்ட்டை ரவுசு வுடுது.! ஒரே டிச்சு !கப்பு ! ரவ்வூண்டு சரக்கடிச்சாதான் ஒறக்கம் வரும்.”
இப்படி குயிலு குப்பம் கோவாலு கோபப்படுற அளவுக்கு பிக்பாஸ் இருக்குங்க.
நம்ம கோவாலுவை டென்சன் ஆக்கிய பார்ட்டிக்கு லீடர் வனிதா.
கிடைக்கிற கேப்ல கிடா வெட்டுது. கண்ணாடியை தொடைத்துக் கொண்டிருந்த சேரனை வம்பு இழுப்பதற்காக முதியவர் மோகன் வைத்யாவிடம் சென்று வத்தி வைக்கிறார்.
ஜாடை மாடையாக கவனித்த சேரனும் ” சார்.! நீங்க கேப்டன். நீங்க நேராகவே என்கிட்டே சொல்லலாம் .யாரோ சொல்றதெல்லாம் கேட்டுட்டு எங்கிட்ட வராதீங்க” என்றால் அதையும் அந்த முதியவர் சரின்னு கேட்டுக்கிறார்.பாவம் சார் அந்த கிழ பிராமணர்.
“தம்பி..இப்படி சவுண்டு விட்டு கத்திப் பேசாதே,,”என்று முகினுக்கு சேரன் அட்வைஸ் பண்ணியதை ஒட்டுக் கேட்ட வனிதா “சவுண்டு விடக்கூடாதுன்னு சொல்றதுக்கு இந்த வீட்டில யாருக்கும் ரைட்ஸ் கிடையாது” என்று கூவியதை கேட்கணுமே! சேரனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை.
அன்றைய நாளில்தான் பிள்ளை கடத்திய கேசில் வனிதாவை விசாரிக்க வந்திருந்த தெலங்கானா போலீஸ் ரொம்பநேரம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
வனிதாவின் சக தோழியான மப்புக்கண்ணி ஷெரினுக்கு எவ்வளவு பெரிய வாய் என்பது நேற்றுதான் தெரிந்தது.
மதுமிதாவை நையப்புடைத்து விட்டார்.
“சதி சாவித்திரி மாதிரி மாஸ்க் போட்டுக்கிட்டு பேசுராளுக” என்று கை காட்டி பேசுகிறார். ஷெரீனுக்கு சதி சாவித்திரி கதையெல்லாம் தெரியுமா என்ன!
அப்பாவி என்று நினைத்துக் கொண்டிருந்த அபிராமி “செருப்பு பிஞ்சிரும்” என்று மதுவை எச்சரித்த நிகழ்வையும் பார்க்க நேர்ந்தது.
தயவு செய்து மூதாட்டி பாத்திமாபாபுவை மேக் அப் இல்லாமல் காட்டவேண்டாம் என்று பிக் பாஸ் கேமரா டீமிடம் சொல்லி வையுங்கள்.