வனிதா பார்க்காதா போலீசா என்ன?
சென்னை போலீசை பல தடவை பார்த்திருப்பவருக்கு இந்த தெலங்கானா போலீஸ் எம்மாத்திரம்.?
பிக்பாஸ் 3 ஆவது சீசனில் கலந்து கொண்டிருப்பவர் வனிதா, நடிகர் விஜயகுமார்-மஞ்சுளாவின் மகள். இவரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் மூலம் பிறந்த மகள்தான் ஜோவிதா.
ஆனந்தராஜை டைவர்ஸ் பண்ணிவிட்டு வனிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனந்தராஜா தெலங்கானாவில் மகளுடன் வாழ்ந்து வருகிறார், தனது மகளை வனிதா கடத்திக் கொண்டு வந்து விட்டதாக இவர் போலீசில் புகார் கொடுத்ததால் தெலங்கானா போலீஸ் சென்னைக்கு வந்து விட்டது,.\
நசரத்பேட்டை போலீஸ் உதவியுடன் பிக்பாஸ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றார்கள். ஆனால் கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகே போலீசை உள்ளே விட்டது பிக்பாஸ் நிர்வாகம்.
இரண்டுமணி நேரம் வனிதாவுடன் போலீஸ் விசாரணை இரண்டு மணி நேரம் நடந்தது, மாலையில் மகள் ஜோவிதாவை பிக்பாஸ் ஸ்பாட்டில் ஆஜர் படுத்துவதாக வனிதா சொன்னதன் பேரில் போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.