இசை அமைப்பாளர்களுக்கிடையில் எவ்வித பிணக்குகளும் இருந்ததில்லை என்று சத்தியம் பண்ணவும் முடியாது. ஆனால் இணக்கமானவர்களும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.
இசை அமைப்பாளார் ஜிப்ரான் இசையில் இசை அமைப்பாளர் அனிருத் பாடி இருக்கிறார்.
இதைப்போல ஏஆர்ரகுமான் இசையில் இளையராஜா பாடுவாரா என்று கேட்டால் “எல்லாப்புகழும் இறைவனுக்கே”!
அனிருத் பாடியது பற்றி ஜிப்ரான் என்ன சொல்கிறார்?
இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், பாடலை கேட்கும் அனைவருக்கும் அற்புதமான ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன். இதை நான் செய்த வேலைக்காக சொல்லவில்லை. அனிருத் பாடியதை பார்த்த, வலுவான ஒரு கூடுதல் நம்பிக்கையுடன் சொல்கிறேன்” என்றார்.
வைபவ், பாலக் லால்வானி நடித்த “சிக்ஸர்” அடுத்தடுத்து மிகச்சிறந்த விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டுள்ளது. டீசரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘லவ் கானா’ கூடுதல் சுவையை ஊட்டியது. இப்போது அனிருத்தின் குரல் சேர்க்கப்பட்ட நிலையில், இது திரைப்படத்திற்கான ஒரு உறுதியான அம்சமாக தெரிகிறது.
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரனுடன் இணைந்து வால்மேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் “சிக்ஸர்” படத்தை தயாரிக்கிறார்கள். சாச்சி எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோமின் (படத்தொகுப்பு), பசார் என்.கே.ராகுல் (கலை), சாம் மற்றும் ராம்குமார் (சண்டைப்பயிற்சி), ஜி.கே.பி, லோகன் மற்றும் அனு (பாடல்கள்), என்.ஜே.சத்யா மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.