தொங்கு சதைகள் ஒரு போதும் அழகு கொடுப்பதில்லை.
அவை தளர்ச்சியின் அடையாளங்கள்.
அத்தகைய அடையாளங்கள் பிக் பாஸ் 3-ல் சில இருக்கின்றன.
நிகழ்ச்சிக்கு பயன்படாத அவர்களினால் வெறுப்பினைத்தான் பிக் பாஸ் 3 சம்பாதிக்க முடிந்தது.
நேற்றைய எவிக்சனில் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாத்திமா பாபுதான் வெளியேற்றப்பட்டார்.
அப்பாடா எவ்வளவு சந்தோசம். பிக்பாஸ் அரங்கமே கைதட்டியது என்றால் இல்லங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்து அல்லவா கொண்டாடியிருப்பார்கள்!
எவிக் சனுக்கு முன்னால் வெளியில் இருந்து கிருத்திகா என்கிற பெண் ஒருவர் கவினுடன் பேச அனுமதிக்கப்பட்டார்.
“யாரை உண்மையாக லவ் பண்றீங்க? “என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.!
பிக்பாஸில் நடக்கிற லவ் எபிசோட் எல்லாம் உண்மை அல்ல என்பதை கவின் தெளிவாகவே சொல்லிவிட்டார்.
“யாரையும் இல்லிங்க.நிகழ்ச்சியை பாக்கிறவங்க சந்தோஷமாக இருக்கணும் .எனக்கு மாமா பொண்ணுங்களே நாலஞ்சு பேர் இருக்காங்க.அவங்களோடு பேசுற மாதிரிதான் பேசுறேன்!”என்றார்.
அடுத்து ஆங்கிலமே பிக் பாஸின் தேசிய மொழியாக இருப்பதைப் போல எல்லோருமே பேசுவது குறிப்பாக வனிதாவை சொல்லலாம் .இதை கவனத்துக் கொண்டு வந்த கமல்ஹாசன் கண்டிப்பார் என்று பார்த்தால் எடப்பாடி மாதிரி நழுவிக் கொண்டார். மக்கள் நீதி மைய நாயகன் அட்வைஸ் பண்ணியதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
எவிக்சனை புதுமுறையில் விளையாடினார்கள்.
அதில் வெளியில் போனவர்தான் பாத்திமாபாபு.என்ன தவம் செய்தனை பாத்திமா என்று கனத்த ஒப்பனையுடன் உள்ளே வந்தவர் இறுகிய மனதுடன் வெளியேறியது ஆனந்தமென் சொல்வனே என்பது போல உணரப்பட்டது.
அடுத்த எவிக்சன் யாராக இருக்க வேண்டும்?
மோகன் வைத்யாவாக இருந்தால் பாடிகாட் முனீஸ்வரனுக்கு தேங்காய் உடைப்பார்கள். எக்ஸ்ட்ரா சுமை.
நியாயப்படி வனிதாவைத்தான் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்..ஆனால் அவரைப் போல குஸ்தி போட வலுவான ஆள் யாரும் இல்லையே! அதனால் பிக்பாஸ் டீமே அவருக்கு மதிப்பெண்களைப் போட்டு உள்ளே வைத்துக் கொண்டுவிடும். வனிதா மீது போலீஸ் விசாரணை என்பது மாஜி கணவரின் உதவியுடன் பிக்பாஸ் நடத்திய நாடகம்தான் என சொல்கிறார்கள்.
வெளியே வந்த பாத்திமாவிடம் உள்ளே இருப்பவர்களைப் பற்றி கேட்ட கருத்துக்கு வனிதாவைத்தான் குறி வைத்து சொன்னார்.
“டாமினேட் பண்ணுகிறார்.சிலர் இதை அறிந்து அவருடன் சேருவது இல்லை.சேரன்,சாண்டி,சரவணன் ஆகியோர் கருத்து சொல்வதில்லை ( பயமோ என்னவோ!) தன்னுடைய மரியாதை கேட்டு விடுமோ என சேரன் பயப்படுகிறார்.
தர்ஷன் பைனல் வரை வருவார். குரல் உயர்த்தி பேசினால் வைத்யா அடங்கிப் போவார்.
கவின் யாரையும் லவ் பண்ண மாட்டான் எண்டர்டெயின்மென்ட் பண்ணுவதற்காக அப்படி நடிக்கிறான்” என்றார் பாத்திமா பாபு.