சூர்யா -கே.வி.ஆனந்த் கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிற படம் ‘காப்பான்’. இது லைகா தயாரிப்பு.
அயன் மாற்றான் படங்களுக்கு பின்னர் சூர்யா-ஆனந்த் சேர்ந்திருக்கும் ஆக்சன் படம்.
இதில் இன்னொரு முக்கிய செய்தி மோகன்லால் நடித்திருக்கிறார். இந்தியாவின் தலைமை அமைச்சராக நடிக்கும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறப்பு அதிகாரியாக சூர்யாவை நியமித்து இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கி விட்டது.
காப்பான் விநாயகர் சதுர்த்தியில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.