அண்மையில் இயக்குநர் ஏஎல்.விஜய் சென்னையை சேர்ந்த டாக்டரை கல்யாணம் செய்து கொண்டார். குடும்ப அளவில் சிறப்புடன் நடந்து முடிந்த இந்த கல்யாணம் பற்றி முன்னாள் மனைவி அமலாபால் என்ன சொல்கிறார்?
எதிர்பார்ப்பது இயல்புதானே!
கேட்காமல் விடுவார்களா ஊடகத்தினர். “என்னம்மா நினைக்கிறீங்க ?”
வாழ்த்தியதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.
மற்றொரு விஷயத்தையும் நாசூக்காக சொல்லிவிட்டார். அதாவது அவர்களிருவருக்குமான டைவர்ஸ் க்கு இதுதான் காரணம் என்பதைப் போல அந்த வாழ்த்து இருக்கிறது.
“விஜய் மிகவும் நல்லவர், மனிதர்.அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்புடன் இருக்கவேண்டும் என்று நிறைந்த மனதுடன் வாழ்த்துகிறேன்!”என வாழ்த்தியவர் இத்துடன் நின்றிருந்தால் யாருக்கும் சந்தேகம் வந்திருக்காது.
“அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்”
அப்படியானால் குழந்தை பெற்றுக் கொள்ள விஜய் விரும்பியதுதான் காரணமா?