
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே சூட்டப்பெற்ற பெயர்தான்‘தலைவன் இருக்கின்றான்’!
உலகநாயகனின் மாக்னம் ஓபஸ் அதாவது மாபெரும் படைப்பு. இந்த படைப்புக்கு இசை சேர்க்கும் பணியில் ஏஆர்ரகுமான் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
2017-ல் கற்பனை செய்யப்பட்ட ‘தலைவன் இருக்கின்றான்’ தற்போது தளத்துக்கு வர இருக்கிறான். கதை வசனம் இயக்கம் கமல்ஹாசன்.
தந்தைக்கு துணை நிற்பார்களா ஸ்ருதி,அக்சரா?
இனிதான் தெரியும்!
கமல்-ரகுமான் இணை சேர்ந்தது பற்றி இருவருமே மகிழ்ச்சி அடைந்து டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.
இசைஞானியை விட்டுப் பிரியாத கமல்ஹாசன் இசைப்புயலுடன் கை கோர்த்திருப்பது ஆச்சரியப்படவேண்டியதில்லை. இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள்தான்.!
லைகாவும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தின் நாயகி தேர்வு இன்னும் தொடங்கவில்லை.
இயக்குநர் ஷங்கரின் பிரமாண்டமான ‘இந்தியன் 2 ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பினைத் தொடங்கும் என்று தெரிகிறது.












