
குடிக்க குளிக்க தண்ணி இல்லியேன்னு கூட நம்ம ரசிகன் கவலைப்பட்டதில்ல.
அவனுடைய கவலை எல்லாம் அக்கா நயன் மச்சான் விக்கி கல்யாணம் எப்போ?
உலக மகா கவலைடா சாமி.!
“உலக கிரிக்கெட் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது. புதுசா ஒருத்தன் தட்டிட்டுப் போகப்போறான்.கேன் வில்லியம்சன் தான் சிறந்த ஆட்டக்காரன்னு நம்ம சேலத்து இஞ்சினியர் பாலாஜிஹாசன் என்பவர் ஒரு ஜோசியத்தை விட்டிருந்தார்.
ஏகப்பட்ட பாராட்டுகள்.
இப்ப அடுத்த ஆருடம் ,”நயன்தாராவுக்கு இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் நடக்கனும்”னு சொல்லிருக்கிறார்.
சாமி உங்க வார்த்தை பலிக்கனும்யா.! சினிமாவ்ல ரொம்ப பேரு ராப்பகலா தூக்கம் இல்லாம கெடக்கிறாங்க. அந்து போகாதா அந்த எடத்துக்கு நாம்ப போகக்கூடாதாங்கிற நெனப்புத்தான் சாமி!
லவ்வர் விக்னேஷ் சிவன் இப்ப நல்லா பியானோ வாசிக்கிறார். டிரம்ஸ் வாசிக்கிறார். “கமல்சாரின் அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ “பாட்டுக்கு செமயா டிரம்ஸ் வாசிக்கிறார்.












