- இதுதானா ,இதுதானா?
- எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
- இவன்தானா,இவன்தானா ,
- மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா?
இனிமையான பாடல் , சாமியில் சீயான் விக்ரமை நினைத்து த்ரிஷா உருகி உருகிப் பாடுகிற பாடல்.
அமலாபாலும் இந்தப் பாடலையேதான் பாடுகிறாரா?
மனம் திறந்து இப்போதுதான் பேசத் தொடங்கி இருக்கிறார்.
தனது மனதில் இருந்த காதலரை இப்போதுதான் வெளியே காட்டி இருக்கிறார்.
முதல் கணவரின் மறுமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவரைப் போல தற்போதுதான் தனது காதலை சொல்கிறார்.
“படங்களை தேர்வு செய்வதற்கு என் காதலர்தான் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.அவரது துணை எனது உயர்வுக்குக் காரணமாக இருக்கிறார்.அவரை என்னால் மறக்கமுடியாது”என்கிறார் அமலாபால்.
அவர் யார் என்பதை சொல்லவில்லை. அதே நேரத்தில் அமலாவும் ஒரு வாலிபரும் நெருக்கமுடன் இருக்கிற படம் வெளியாகி இருக்கிறது.
அவர்தான் அமலாவின் மணவாளரா? அவர்தானா?