
“100 நாள் வரை செக்ஸ் வச்சுக்காமல் இருக்கமுடியுமா “போன்ற சின்னத்தனமான கேள்விகளையெல்லாம் பிக்பாஸ் நடத்துகிறவர்கள் கேட்டார்கள்.,வாய்ப்புத் தருவதாக சொல்லி விட்டு வாய்ப்பே தரவில்லை”என தெலங்கானா போலீசில் நடிகைகள் காயத்ரி குப்தா,ஸ்வேதா ஆகியோர் புகார் செய்திருந்தனர்.
வழக்கு பதிவு செய்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உத்திரவு பிறப்பிக்கப்படும் வரை பிக்பாஸில் யாரையும் கைது செய்யக்கூடாது என வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.
போலீசில் புகார் செய்திருக்கும் நடிகைகள் எவ்விதமான ஆதாரங்களும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












