ராணா டகுபதி. பாகுபலியின் பிரமாண்ட நாயகர்களில் ஒருவர். நம்ம நடிகை திரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நெருங்கிய நண்பர். மிகப்பெரிய நட்சத்திர குடும்பம் சார்ந்தவர்.
கடந்த ஆண்டு படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனைகள் நடத்தியபோது சோடியம் லெவலில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சைகள் பெற்று வந்தாலும் கிட்னி சர்ஜரி அவசியம் என அறிவுரை வழங்கப்பட்டது.
உடனடியாக அமெரிக்க சென்று அங்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்து கொண்டார். சர்ஜரி சக்சஸ் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
நமது தமிழ்நாட்டிலும் இரண்டு முக்கிய நடிகர்கள் கிட்னி சிகிச்சை செய்து கொண்டவர்கள்தான்.