
சினிமா கதையில் தான் இப்படியெல்லாம் நடந்ததாக சொல்லுவார்கள். ஆனால் நிஜத்திலேயே பிரபல இந்தி நடிகைக்கு நினைவு போய்விட்டது.
ஆறு மாத காலம் இந்த உலகமே தெரியாமல் இருந்திருக்கிறார்.
அவரது பெயர் திஷா பதானி. கிரிக்கெட் ராஜா எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இணையாக நடித்திருந்தார்.
இவருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும்.டைகர் ஷெராப்பின் காதலி என்பதாக இவரைப் பற்றிய தகவல் உண்டு.
அண்மையில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் இருந்த போது தலையில் பலத்த அடி பட்டுவிட்டது.
இதற்கு பின் என்ன நடந்தது? திஷா பதானியே சொல்கிறார்.
“சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் ஆறு மாதம் எனக்கு ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. என்ன நடந்தது என்பதே தெரியாது..கொடுமையாக இருந்தது .தன்னைப் பற்றிய எந்த தகவலும் தெரியாதவளாக வாழ்ந்தேன்!மெது மெதுவாக நினைவுகள் திரும்பின. நான் மறுபடியும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிக்கு திரும்பி விட்டேன் ” என்கிறார் திஷா.












