என்ன செய்றது ..நம்ம சிஸ்டம் சரியில்ல.
சாட்டை படத்தில நடிச்ச சமுத்திரக்கனி,தம்பி ராமையா ரெண்டு பெரும் சம்பளம் வாங்கல. ஆனா அந்த படத்தை வாங்கிய டி.வி.வாரா வாரம் சம்பாதிக்கிது. இத சொல்லி வருத்தப்பட்டாரு. இயக்குநர்-நடிகர்.சமுத்திரக்கனி.
அன்பழகன் இயக்கி சமுத்திரக்கனி நடித்திருக்கும் ‘இரண்டாவது சாட்டை’ படத்தின் பாடல், முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் தான் அவரது வருத்தம் வெளிப்பட்டது.
இடது சாரி கண்ணோட்டம்,சமுதாய அக்கறை, பொது நலன் ஆகியவற்றில் அக்கறை கொண்டவர் கனி. அவரது படங்களில் கண்டிப்பாக சமூக அழுத்தம் இருக்கும். ‘இரண்டாவது சாட்டையும் அப்படித்தான்.இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மிகவும் முக்கியமான தகவலை தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா இந்த விழாவில் சொன்னார்.
“பாகுபலியை விஞ்சக் கூடிய ஒரு படம் சமுத்திரக்கனியிடம் இருக்கிறது. அது என்று வெளிப்படும் என்பது காலத்தின் கைகளில் இருக்கிறது” என்றார்.