நேர்கொண்ட பார்வை மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் செய்திருந்த கேரக்டரை அஜித்குமார் எப்படி செய்திருக்கிறார் என்பது முக்கிய காரணம். அடுத்து சில ஊடகங்களில் நேர்மாறான தகவல்கள் வெளியாகி இருந்தது,
அஜித் இடைவேளைக்குப் பின்னர்தான் வருகிறார், அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தில் எதுவுமில்லை என்பது போன்ற நெகட்டிவ் செய்திகளை பரப்பி இருந்தார்கள். இதனால் அஜித் ரசிகர்கள் வெகுண்டு போய் இருந்தனர். படம் பார்த்த பின்னர்தான் இது வேற ரேஞ்சு டாப் ல வைக்க வேண்டிய படமென்பதை புரிந்து கொண்டு விட்டார்கள்.
இன்னொரு ஆரோக்கியமான விஷயம் என்னவென்றால் சூர்யா -ஜோதிகா தம்பதியர் படத்தைப் பார்த்து விட்டு அஜித்துக்கு பூங்கொத்துடன் ஒருசீலிட்ட கவரில் கடிதமும் வைத்து அனுப்பி இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர இந்த செய்தி பதிவு செய்யும்வரை வேறு எவரும் பாராட்டோ, பூங்கொத்தோ அனுப்பவில்லை.!