கங்கனா ரனாவத் நடித்த குவீன் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழில் பாரீஸ் பாரீஸ் என பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் காஜல் அகர்வால் எல்லியவ்ரம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தி படத்தை அப்படியே எந்த வித மாற்றமும் செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்.
காஜல் அகர்வாலின் வலது பக்கத்து மார்பகத்தை நடிகை எல்லியவ்ரம் பிசைவது மாதிரி ஒரு காட்சி.
இந்த காட்சியை அனுமதிக்க முடியாது. கண்டிப்பாக தூக்கிவிடுங்கள் என்று சொன்னதுடன் 25 இடங்களை வெட்ட சொல்லி இருக்கிறார்கள்,தமிழ் நாட்டில்!
“அதெப்படி மலையாளம் ,கன்னடம்,இரண்டிலும் எந்த கட்டும் கொடுக்காமல் யு.ஏ. கொடுத்திருக்கிற போது தமிழ்நாடு தணிக்கைக்குழு மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் தணிக்கைக்குழு வேறுபட்டு நடப்பது ஏன்?”என பாரீஸ் பாரீஸ் படத் தயாரிப்பாளர் கேட்கிறார்.
என்னம்மா பண்றது? சுயாட்சி கேட்டுப்பாருங்க,!