
“தமிழீழ விடுதலைப் போரில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தலைவர் பிரபாகரனுக்கு எதிரான கருத்துகளை சொன்னவர் என்கிற குற்றச்சாட்டு மு.முரளிதரன் மீது இன்றளவும் இருக்கிறது.
இவரது வாழ்க்கை வரலாறு படத்தில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிக்கக்கூடாது என்கிற கருத்து தமிழர்கள் மத்தியில் இருக்கிறது.
அவர் மு.முரளிதரனாக நடிப்பாரா?
“நடிக்கிறேன் “என்கிறார் மக்கள் செல்வன்.
“அவரது வாழ்க்கையைப் பற்றிக் கேட்டேன். நான் கேட்ட கதை யாரையும் பாதிக்காத வகையில் அவரது சொந்தக் கதை அமைந்திருந்தது. படம் வெளிவந்தால் எல்லாவற்றுக்கும் அதில் பதில் இருக்கும்” என்கிறார் விஜயசேதுபதி.












