பாகுபலி பிரபாஸ் மணமேடை ஏறி ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டாதவரை அனுஷ்காவுடனான தொடர்பு பற்றிய வதந்திகள் வால் வளர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
பிரபாஸ்க்கு வயது நாற்பது. இன்னும் கல்யாணம் கட்டிக்கலியே என்கிற கவலையில் அம்மாவும் அவரது குடும்பத்தினரும் பெண் தேடி வருகிறார்கள்.
அண்மையில் வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வர வீட்டு சம்பந்தம் கிடைத்திருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.
பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் தங்களைப் பற்றிய காதல் செய்திகளை கடுமையாக மறுத்திருந்தாலும் வதந்திகள் அவர்களை விடுவதாக இல்லை.
இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ரகசிய இடத்தில் சந்திப்பதாகவும், இருவருக்காக சாகோ திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் லாஸ் எஞ்சல்சில் வீடு தேடுவதாகவும் சொல்கிறார்கள்.
எது உண்மை என்பது கல்யாணப் பத்திரிக்கை வந்த பிறகுதான் தெரியவரும்.
சீக்கிரமே கல்யாணம் நடக்கட்டும்!