
“தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!”என காதலர் பிரபாஷும் ,
“என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே”என்று காதலி அனுஷ்காவும் கவிதாயினி தாமரையின் பாடலை பாடுவது மாதிரி சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பட உலகைப் பொருத்த வரை பிரபாஷ்-அனுஷ்காவின் ஆத்மார்த்தமான காதலை அறிந்தே இருக்கிறது.
கல்யாண வயதை இருவருமே கடந்து விட்டவர்கள்.
காதல் வாழ்க்கையிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் கல்யாணத்துக்கு என்ன தடை?
பணமா,அந்தஸ்தா?
பிரபாஷின் குடும்பத்தினர் ஜாதிப் பற்று மிக்கவர்கள். கடுமையான கன்சர்வேடிவ்ஸ் .பழமை வாதிகள்.
தங்களின் தெலுங்கு ஜாதிப் பெண்ணை மட்டுமே மணமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அனுஷ்கா வேற்று சாதி,வேற்று மாநிலம் கன்னடம். அதனால் அவரை மருமகளாக ஏற்க மறுக்கிறார்கள்.
குடும்பத்தினரை தெய்வமாக மதிப்பவர் பிரபாஷ். அவர்களது சொல்லத் தட்ட முடியாத சிக்கலில் உழல்கிறார்.அவர்களை மீறவும் இயலாமல் அனுஷ்காவை மறக்கவும் முடியாமல் வேதனையில் வெந்து கொண்டிருக்கிறார்.
இதனால்தான் இருவரது காதலும் கருகிவரும் நிலையில்!
இருவரது நெருங்கிய நண்பர்கள் என்ன கருதுகிறார்கள்?
“அவர்களை பிரித்து மணம் செய்து வைத்தால் இருவரது வாழ்க்கையிலும் நிம்மதி இல்லாது போய்விடும்.அந்த அளவுக்கு மனதளவில் கலந்து விட்டவர்கள்.”என்கிறார்கள்.
பிரபாஷின் வயது 40.
அனுஷ்காவின் வயது 38
இருவரது காதலுக்கு சாதியும் பழமைவாதமும் மாநிலமும் எதிரிகளாக இருக்கின்றன.
அனுஷ்காவின் காதலுக்கு அவர்களின் குடும்பம் இசைவாகவே இருக்கிறது.
அப்படியானால் கல்யாணம் என்பது இவர்களுக்கு எட்டாக்கனியா?
பிரபாஷின் முன் இரண்டு சாய்ஸ் இருக்கிறது.
தன்னுடைய குடும்பத்தினரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்க வேண்டும்.
இயலாது என்றால் குடும்பத்தினரை மீறி அனுஷ்காவின் கை பிடிக்க வேண்டும்.
முடியுமா பிரபாஷினால்?












