
சீரியலை விட நல்லா இருக்குன்னுதான் ரொம்ப பேர் பிக் பாசை பார்க்கிறாங்க. பொம்பளைகளை பொம்பளைகளே நாசம் பண்றது ,அடுத்தவ குடியை கெடுக்கிறதுன்னு எல்லா சேனலுமே இம்சையா இருக்கிறதால பிக்பாசை ரிலாக்ஸா பாக்க முடியிது.
கவர்ச்சிக்கு கவர்ச்சியும் இருக்கும், தினமும் சண்டையும் நடக்கிது.கக்கூசை கான்பரன்ஸ் ஹாலாக்கி அங்கே ஒப்பாரி வைக்கிறதையும் பார்க்க முடியிது. செத்தவன் கையில வெத்தலை பாக்கு வச்ச மாதிரி சில கேரக்டர்களையும் பாக்க முடியிது.காதல்,மோதல்,காமடி எல்லாமே கலந்த ஒரு மிக்சர் பொட்டலம் மாதிரி.
நேத்து எவிக்சன்ல அழுவாச்சி அபிராமி அதிக அளவில் கட்டிப் பிடித்தல் இல்லாம வெளியேறினாங்க. ஒரே ஒரு ஆளு மப்புக்கண்ணி செரின்தான் விசும்பல்.இனிமேதான் இந்த அம்மா அலப்பறை பண்ணுவாங்க. அப்படித்தான் ஸ்கிரிப்ட் போகும்.தலைவி ஆயாச்சே!
மக்களால் வெளியேற்றப்பட்ட சண்டிராணி வனிதாவை எந்த அடிப்படையில் பிக்டாடி உள்ளே அனுப்பிச்சார்னு அந்த ஜனநாயக கோட்டை கமல்சாரைத்தான் கேட்கணும்.
நேத்திக்கி உலகநாயகன் கமல்தான் ஹைலைட்.
கக்கூஸ் கான்பரன்ஸ் பத்திதான் கண்டிச்சார்.
“ஆண்,பெண் தனித்தனி டாய்லெட் இல்ல.பொது இடமான அங்க போய் கூடிக்கூடி பேசுறது அநாகரீகமா உங்களுக்கு தெரியலியா? பாத் ரூமை பஞ்சாயத்து பேசுற எடமா மாத்திறாதிங்க. பேர் வச்சுரப் போறாங்க.” என்றதும் லாஸ்லியா,முகென்ராவ்,கவின் ஆகியோர் முகம் வாடிப்போச்சு.” என்ற கமல் “என்ன சேரப்பா, இப்ப வேறப்பான்னு சொல்றாங்களே” என்று சேரனையும் சைடு வாங்கினார்.
“அப்பா நேர்மையா இருந்தாதானே மகள் போற எடத்தில மகளை நம்புவாங்க”ன்னு செண்டிமெண்ட் டயலாக்கை விட்டார். உங்க பேரு டேமேஜ் ஆகி ரொம்ப நாளாச்சு புனிதன் சார்!
அப்படியே கவின்,முகென் ராவ்,சாண்டி, தர்ஷன் கோஷ்டியை பார்த்து “என்ன கற்பூரங்களா.. முகென், டேபிளை, தட்டுறார், படுக்கையை உடைக்கிறார் என்ன நடந்தது” என்று கமல் கேட்டதும் “வத்திக்குச்சி உள்ள வந்திருச்சி சார்”தலையை கவிழ்த்தபடியே நக்கலா கமெண்ட் விட்டார் சாண்டி.
இப்ப குளோஸ் அப்ல வனிதா முகம். இருள் அடைஞ்சி போச்சு.
“வத்திக்குச்சின்னு பேர் வச்சது யாரு கஸ்தூரி?”என கமல் போட்டு வாங்கப் பார்த்தார். சரியாத்தான் வேலை செஞ்சது.!
“கற்பூரம் பசங்க சார்! வத்திக்குச்சி வனிதாவிஜயகுமார் சார்!”என்ற கஸ்தூரி “சரியாத்தானே சார் வருது “என்று தனது ரைமிங் சென்ஸை காட்டினார் கருத்து கஸ்தூரி.
இரு வச்சு செய்றேண்டி என்கிற வன்மம் வனிதாவின் முகத்தில் தெரிஞ்சது.
“ஆமா வனிதா நீங்க ஏன் உள்ள வந்தீங்க?”என்றார் கமல். ஆழ்வார் பேட்டை ஆண்டவா இந்த கேள்விய பிக் பாஸிடம்ல கேட்டிருக்கணும்.
இந்த கேள்விக்கு வனிதா சொன்ன பதிலை கேட்டு பார்வையாளர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே அத்தனையும் ஏளன அம்புகள்.!எகத்தாள ஓசைகள்.
“மக்கள் என்ன ரொம்ப மிஸ் பண்ணுனாங்க சார். நான் உங்கள மிஸ் பண்ணினேன்” என்றதும் சாண்டி பக்கத்தில் இருந்தவர் மீது சாய்ந்து விட்டார்..
“என்ன ஆச்சு சாண்டி?”
“லைட்டா கேர் ஆகுது சார்”
மனதுக்குள் சிரித்துக் கொண்ட கமல் அடுத்து கஸ்தூரியின் பக்கமா பார்வையை விட்டார்.
“உங்களுக்கும் வனிதாவுக்கும் என்ன பிரச்னை?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்.!சப்ப மேட்டருக்கெல்லாம் சண்டை போட மாட்டேன். புதச்சதை தோண்டி எடுத்து காயப்படுத்துறது,இதெல்லாம் ஏன்னு கேட்டா நீ யார் கேட்கிறதுக்குன்னு தர்ஷன் கேப்பார்.மேடம் கேப்பாங்க” என்றார் கஸ்தூரி.
அபிராமி கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்னு சொல்லி பிக்பாஸ் அவரை வெளியே அனுப்பி விட்டதால் தலைவர் பதவி காலி.
இப்போது மப்புக்கண்ணி ஷெரின் தலைவி.
இனிமே ஸ்கிரிப்ட் கடுமையாத்தான் இருக்கு.












