
“எனக்கு உளறுவாய் என்கிற பெயர் உண்டு. எனக்கு எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும் என்பது தெரியாது. இதனால் நான் அதிகமாக மற்றவர்களுடன் பேசுவது இல்லை.பேசப்பயம்.பழகப் பயம். பயம் பயம்” என கமல்ஹாசன் ஸ்டைலில் சொன்னார் சமீரா ரெட்டி.
இந்தி,தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
தற்போது எப்படி உளறாமல் பேச முடிகிறது என்று கேட்டால் அதற்கு நடிகர் ஹிருத்திக்ரோஷன்தான் காரணம் என்றார்.
எப்படி அவரால் சாத்தியமாயிற்று?
“எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார்.அது என்னை மாற்றிவிட்டது.என்னிடம் இருந்த பயம்,உளறுவாய்த்தனம் எல்லாம் படிப்படியாக குறைந்து என்னை முழு மனுஷி ஆக்கியது அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.அது மட்டுமல்ல தற்போது என்னால் 30 வகையாகவும் பேசமுடியும்”என்கிறார்.












