
கூத்துப் பட்டறை கலைஞனாக திரை வாழ்வை ஆரம்பித்தவர நடிகர் விதார்த்.
அவர் தற்போது ஒரு புதிய களத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். துப்பறிபவராக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் மனோஜ் ராம்.
இவர் பிரபல இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜனிடம் இணை இயக்குநராக இருந்தவர்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் ராம் என்ன சொல்கிறார்?
“இப்படத்தை மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ளோம். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்களும் விறுவிறுப்பும் கூடியதாக அமைந்திருக்கும். ( இப்படித்தான்யா எல்லோரும் சொல்றீங்க!)
சம காலத்தில் உள்ள மிக முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் கரு உருவாக்கப் பட்டுள்ளது”. என்றார்.
நடிகர் விதார்தை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்தது பற்றி கூறும் போது, “விதார்த் தொடர்ந்து கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்கள் செய்து, கதையின் நாயகனாக விளங்குகிறார்.
இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார். எங்களை மாதிரி புதுமுக இயக்குநர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதம்.
விதார்த்தின் நண்பனாக பிக்பாஸ் புகழ் சென்ட்ராயன் நடிக்கப் போகிறார். கதை ,திரைக்கதை, வசனம் , இயக்கம் படத்தின் நடிகர் சந்தோஷ் இப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் .
சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி பிரியா மற்றும் பலர் நடிக்க உள்ளனர். வித்தார்த் மனைவியாக , ஹிரோயினாக நெடுநல்வாடை படப்புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார். “என்றார்.












