கட்டி அழுகிற போது கையும் துழாவுகிற கதையாகிப் போச்சு அந்த பெண் எம்.பி.யின் கதை.!
கட்சிக்குள்ள சசிகலா புஷ்பாவுக்கு எம்புட்டு கவுரதை இருக்குங்கிறத ஊரு ஒலகம் நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கு. ஜெயலலிதா என்னை அறைஞ்சார்னு சொல்லி கட்சியையே கலவரபூமியாக்கின புண்ணியவதி.!
இப்ப அந்தம்மா தளபதி விஜய் பக்கமாக திரும்பி ஒரண்டை இழுக்க ஆரம்பிச்சிருக்காங்க.
விஜய், சிவகார்த்திகேயன் ரெண்டு பேருக்கும் சண்டை இழுத்து விட பார்க்கிறாரு.
“விஜய்க்கு தில் இருந்தால் சிவகார்த்திகேயனுடன் மோதிப் பார்த்திட வேண்டியதுதானே! வளர்ந்து வர்ற அடுத்த சூப்பர் ஸ்டார் சிவா கார்த்திகேயன்தான்.அவர் படம் ரிலீஸ் ஆகிறபோது விஜய் தன்னோட படத்தை ரிலீஸ் பண்ணிப் பார்க்கட்டுமே” என மூட்டி விட்டிருக்கிறார்.
“இந்தம்மா தேர்தலில் போட்டி போடட்டும் அப்ப நாங்க யாருங்கிறத கட்டுறோம்னு’ரெண்டு தலைகளின் ரசிகர்களும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க.
நல்லா வெயிட்டா பண்ணுங்கப்பா என்கிறார்கள் சில அதிமுக தலைகள் !