
கதை,வசனம்,இயக்கம் : சசி , ஒளிப்பதிவு :பிரசன்னகுமார்,
சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார், லிஜோமோல்,காஷ்மீரா,
***************
மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ பிரபு-கார்த்திக் மாதிரி உறவுகள் சித்தார்த்-ஜி.வி.பிரகாஷ்குமார் .இவர்கள் முட்டிக் கொள்கிற கதைக் களம்தான் சிவப்பு,மஞ்சள்,பச்சை.
என்றாலும் திரைக்கதையின் போக்கு இயக்குநர் சசியின் மெலோடிராமா அணுகுமுறை ,அவருக்கே உரிய டச் ,கேரக்டர்களின் வீரியம் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.
வட சென்னையின் ஒரு பக்கம் பைக் ரேஸ்.
முரட்டுத்தனமும் பகையும் இரட்டைப் பிறவிகள். ஜி.வி.பிரகாஷ்க்கு அப்படியே கர்ண கவசமாக ஒட்டி இருக்கிறது. டிராபிக் சார்ஜண்ட் சித்தார்த்துக்கு பயந்தாலும் தனக்கு பாதிப்பு என்கிறபோது எகிறுதல் இயற்கையாக இருக்கிறது.பாம்பின் சீறலை பார்க்கிறோம்.
அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற பொறுப்பு தம்பிக்கு இருக்கிறது,.பிரகாஷ் பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் அக்கா லிஜோமோல் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்பது சின்னப்பிள்ளை வயது சத்தியம்.
ஆனால் வயதுகளைக் கடந்து பருவங்கள் மாறிய பின்னர் அந்த சத்தியத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டு அடம் பிடிப்பது அர்த்தமற்றது .என்றாலும் இதில்தான் கதையின் அடித்தளத்தையே கட்டியிருக்கிறார் கதாசிரியர் சசி.
அந்த சத்தியத்தை அர்த்தமற்றதாக மாற்றுவதற்கு ஜி.வி.பிரகாஷ், சித்தார்த்,லிஜோமோல் மூவரும் எவ்வளவு காயப்படுகிறார்கள்.
எல்லாமே ஹை லைட் காட்சிகள்.!
மாமன் -மச்சான் உறவு எவ்வளவு வலுவானது என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
தன் சகோதரியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் தனக்கு மாமன் ஆகிறார் என்கிற கசப்பு உணர்ச்சி பிரகாஷிடம் பிரமாதமாக வெளிப்படுகிறது. ஆனாலும் அக்கா கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவுக்கா முகம் பார்க்காமல் இருக்கிறார்?இடிக்கிதே!
சித்தார்த் இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நேர்மையான அதிகாரியாக வெளிப்பட்டிருக்கிறார். கருணை, கண்டிப்பு, காதல் .வெகுஜன சிறந்த நடிகருக்கான அத்தனையும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
காதலியின் மனம் நோகக்கூடாது, அதே நேரத்தில் மச்சானையும் விட்டு விடக்கூடாது என்பதில் கவனம் காட்டி நம்மை கவர்கிறார். அக்கா,தங்கச்சி உள்ள ரோசக்காரன் யாரையாவது மச்சான் என்று சொல்லி உறவு கொண்டாடிவிட முடியாது. கோபம் நெற்றிக்கு வந்து விடும் .அதையெல்லாம் தெளிவாக காட்டிய இயக்குநர் சசி கிளைமாக்சில் ரொம்பவே இழுத்து இருக்கிறார்.நீளம்டா சாமி!
வில்லன் திணிப்பு.இன்னும் எத்தனை படங்களில் பார்க்க போகிறோமோ!
சினிமா முரசத்தின் மார்க் :3 / 5
1












