மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரியலாக எடுக்கிறார்கள். இந்த சீரியலை கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார்.
எனை நோக்கிப் பாயும் தோட்டா சிக்கல் இன்னும் முடியவில்லை என்றாலும் அவர் லண்டனில் இருந்து சென்னைக்குத் திரும்பி விட்டார்.
இந்த நிலையில்தான் ரம்யா கிருஷ்ணனின் ஜெயலலிதா போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு ஆங்கிலத்தில் ‘க்வீன் ‘( ராணி ) என பெயர் வைத்திருக்கிறார்கள்.
வெள்ளைப் புடவை, கருப்பு சிவப்பு பார்டர்.மக்களை நோக்கிப் பேசுவது போல முதுகுப் பக்கமாக இருந்து படம் எடுத்திருக்கிறார்கள். ஜெ.வின் சிறுபிள்ளை பிராயத்தை கிடாரி புகழ் பிரசாத் முருகன் இயக்க ரம்யா கிருஷ்ணன் போர்ஷனை கவுதம் மேனன் இயக்கப் போகிறார்.
முதல் சீசனில் 11 எபிசோடுகள் இருக்கும்.