கலைப்புலி தாணுவின் பிரமாண்ட படமான அசுரனில் இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பவர் தனுஷ்.
வெற்றி மாறனின் இயக்கம்.
முன்னோட்டமே பெரிய சாதனையைச் செய்திருக்கிறது.
இந்தப் படத்தை அடுத்து தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்க விருக்கிறார்.
இவர் ‘கேம்ஸ் ஆஃப் த்ரோன்’ படத்தில் நடித்திருப்பவர்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனிலும் ஏனைய நாடுகளிலும் நடக்க இருப்பதால் படத்துக்கு உலகம் சுற்றும் வாலிபன் எனப் பெயரிடப்படலாம் என தெரிகிறது.