பொதுவாக பிக்பாஸ் 3 -ல் பெரும்பாலும் பெண்கள் குட்டை டவுசர் அணிந்து கொண்டு தொடைகளைக் காட்டிக்கொண்டுதான் வருகிறார்கள்.
அப்படி கவர்ச்சி காட்டினால்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்திருப்பார்களோ அல்லது பிக்பாஸ் அப்படி கண்டிஷன் போட்டிருப்பாரோ ,யாருக்குத் தெரியும்?
காவிரி பிரச்னைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா சக போட்டியாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்
“ஒரு பெண் முதல் நாளில் இருந்தே மாலை நேரம் ஆகிவிட்டால் உள்ளாடை இல்லாமல் வெங்காயச் சருகு போன்ற டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து கொண்டு சுற்றினாள். இதை நானும் வனிதாவும் கூப்பிட்டு கண்டித்தோம் “என்பதாக அந்த குற்றச்சாட்டு அமைந்திருந்தது.
யாருடைய பெயரையும் மதுமிதா குறிப்பிட்டுச்சொல்லவில்லை.
ஆனால் இதற்கு பதில் அபிராமி சொல்லி ‘அது நான்தான்’ என்பதைப் போல சொல்லி இருக்கிறார்.
“உங்களை உயர்த்திக் காமிக்க மத்தவங்களை ஏன் அசிங்கப் படுத்துறீங்க” என்கிற நேர்கொண்டபார்வை படத்து வசனத்தை சொல்லி ‘யாராவது இந்த படத்துக்கு டிக்கெட் எடுத்து அவருக்கு கொடுங்களேன்!” என்று டிவீட் பண்ணியிருக்கிறார்.
ஏம்மா நீயே எடுத்துக் கொடுத்திட வேண்டியதுதானே!