“ஆளாளுக்கு எங்க அத்தையோட கதைய படமாக்குவீங்கன்னு சொன்னா அத கேட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு நாங்க என்ன கேனைங்கலா, அதெல்லாம் நடக்காது “என்று கவுதம் மேனனுக்கு கட்டையைப் போட்டிருக்கிறார் தீபக் ஜெயகுமார்.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகன். தீபாவுக்கு தம்பி.
“என்னிடம் ஏஎல்.விஜய் வந்தார் .எங்க அத்தையின் வரலாறை எப்படி படமாக்கப்போறார் என்பதை சொன்னார். விளக்கமாக சொன்னார்.விவரமாக நானும் கேட்டுக் கொண்டேன்.படம் எடுப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்கிற சான்றிதழையும் கொடுத்து விட்டேன்.
இந்த நிலையில் வேறு யாரோ என் அத்தையின் கதையை படமாக்கப்போவதாக தெரிகிறது. என்னிடம் அனுமதி பெறாமல் நடப்பதாக தெரிகிறது.விளைவுகளை சந்திக்க நேரிடும் “என்கிறார் தீபக்.
வாசுதேவமேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கப்போவதாக வெப் சீரிஸ் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.குவீன் படத்தின் விவரம் பற்றி கவுதம் மேனன் விளக்கம் சொல்லி விட்டு வெப்சீரிஸ் எடுத்தால் நல்லது.இல்லாவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் “என்கிறார்.