
அரசியல் பிரபலங்கள்,விளையாட்டு வீராங்கனைகள்,வீரர்களின் வரலாறு பயோபிக்காக மாறி வரும் கால மிது.
அந்த வரிசையில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பயோபிக் படமாகிறது.
சமந்தா நடிக்கலாம் என தெரிகிறது.
இதைப் பற்றி சிந்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
“சமந்தா சரிப்பட்டு வரமாட்டார்.ஆனால் தீபிகா படுகோனே பொருத்தமாக இருப்பார். ஏனெனில் அவரும் பாட்மிண்டன் பிளேயர். ஆனால் தயாரிப்பாளர் யாரை முடிவு செய்வாரோ அதில் நான் தலயிட மாட்டேன்.” என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு சொன்ன பிறகும் சமந்தா அந்த பயோபிக் கில் நடிப்பாரா?












