நட்சத்திர ஹோட்டலில் லைகாவின் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.
இந்த விழாவில் தனது ரசிகர்களுக்கு சூர்யா முக்கியமான கோரிக்கையை வைத்தார்.
வழக்கமாக அவர் சொல்லிவருவதுதான் என்றாலும் சந்தர்ப்பம் அதற்கு மிகுந்த முக்கியத்தைக் கொடுத்திருக்கிறது.
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த சம்பவம் இன்னும் நெஞ்சை விட்டு அகலுவதாக இல்லை.
“எனது அன்புத் தம்பிகளுக்கு முக்கியமான கோரிக்கை.
நான் வழக்கமாக சொல்வதுதான் என்றாலும் அதற்கு நான் அழுத்தம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.காரணம் சூழல் அப்படி!
எனது தம்பிகள் 10 ஆயிரம் பேர் ரத்ததானம் செய்து பெருமைக்குரியவர்களாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. காப்பான் வெளியாகும் 20-ஆம் தேதியன்று யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம்.
அப்படி வைத்துதான் நாம் நமது வலிமையைக் காட்டவேண்டும் என்பதில்லை. எனவே எனது தம்பிகள் அமைதியுடன் அன்பை வெளிப்படுத்த கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.