நடிகர் நானியின் கேங் லீடர் படம் அண்மையில் ஆந்திராவில் ரிலீஸ் ஆகியது.
கலவையான விமர்சனங்கள். எதோ பரவாயில்லை என்கிற ரீதியில் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜெர்சி படத்தில் இசை அமைத்திருந்த நம்ம ஊர் அனிருத்தை நானிக்குப் பிடித்துப் போனதால் தனது கேங் லீடருக்கும் அவரை இசை அமைக்க சொல்லியிருந்தார்.
ஆனால் கேங் லீடருக்கு தகுந்த மாதிரி அனிருத்துக்கு இசை அமைக்கத் தெரியவில்லை என்று சில விமர்சகர்கள் தாக்கி இருக்கிறார்கள். இசையால்தான் படம் எடுபட வில்லை என்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்கள்,
3 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி இசை அமைத்திருக்கிறாரே என பிரபல இணையதளம் குற்றம் சாட்டி இருக்கிறது.