இத்தனை நாளும் தனது திரு வாயினை திறக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்றுதான் போதி மரத்தின் ஞானம் கிடைத்திருக்கிறது.
“இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் .தென்னக மக்களும் ஏற்க மாட்டார்கள். நாட்டுக்கு ஒரு பொது மொழி அவசியம்தான் ஆனால் அது இந்தியாவில் சாத்தியமில்லை,. பொது மொழி கிடையாது.வடநாட்டிலேயே பல மாநில மக்கள் இந்தியை ஏற்க மாட்டார்கள்.”என சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார்.