சிம்பு நல்ல நடிகர்.தமிழினப் பற்றுள்ளவர்.
ஆனால்….?
அவரது அணுகுமுறை பலரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டிராஜ் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.
” நான் அவருக்கு எதிரானவன் அல்லன் .ஆனால் படப்பிடிப்புத் தளங்களுக்கு அவர் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. நயன் நடித்து நான் இயக்கிய இது நம்ம ஆளு படத்துக்கு அவர் சரியாக வந்ததில்லை.
அண்மையில் கடைக்குட்டி சிங்கம் படம் பார்த்ததாகவும் அதில் கிளைமாக்சில் தன்னையறியாமல் அழுது விட்டதாகவும் சொல்லி அந்த மாதிரியான குடும்பப் படத்தில் நடிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று சொன்னார்.
பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறேன். அவருக்கான கதையை தயார் செய்து விட்டு சந்திக்கலாம் என்றிருக்கிறேன்.
எனக்குள்ள வருத்தம் எல்லாம் அவருக்குரிய இடத்தில் அவர் இல்லையே என்பதுதான்” என்றார் பாண்டிராஜ்.