
ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு ஊரு பக்கம் சொல்வாக.
அது நெசம்தான்!
கல்யாணம் பண்ணினமோ புருசனோடு குடும்பம் நடத்தி புள்ளை குட்டியை பெத்துப் போட்டோமான்னு கிடக்கிறதில்ல. இந்த பிரியாமணியைத்தான் சொல்றோம்.
அமரர் பாலுமகேந்திரா என்ற ஜாம்பவான் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் பல விருதுகளை பெற்றிருக்கிறார். கல்யாணம் ஆன பிரியா மணி, தற்போது இணைய தொடர் உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
தற்போது இந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் இணைய தொடர்களில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில், ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) என்ற வெப் சீரிஸ் மூலம் பிரியா மணி இணைய தொடரில் அறிமுகமாகிறார்.












