இடியும் மின்னலும் மோதுமா …மோதினால் என்னவாகும்? சும்மா கற்பனை பண்ணிப் பாருங்களேன்!
தீபாவளி,பொங்கலுக்கு தமிழ்ச்சினிமாவில் அப்படித்தான் நடக்கப்போகுது.!
தீபாவளிக்கு கார்த்தி நடித்திருக்கிற ஆக்ஷன் திரில்லர் கைதி ரிலீஸ் .விஜய் நடித்திருக்கிற பிகிலும் அன்றே ரிலீஸ். பணபலம் படைபலம் மீடியா பலம் பிகிலுக்கு! இந்த படத்துடன் கைதி மோதுகிறார் என்றால் கில்லாடிக்கே வெள்ளை அடிக்கிற ஆளாகத்தானே இருக்க முடியும். மொத்தத்தில் தீபாவளிக்கு செம விருந்து.
அதே மாதிரிதான் பொங்கலுக்கும்!
தமிழர் திருநாள். இன்னும் பெயரிடப்படாத கார்த்தி,ஜோதிகா,சத்யராஜ் நடித்து வருகிற படமும் பொங்கல் ரிலீஸ். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிற தர்பாரும் அன்றுதான் ரிலீஸ்.
கடுமையான போட்டி ஆனால் தலைவாழை இலை போட்டு விருந்து வைக்கிறார்கள். தியேட்டர்களில் கூட்டம் பொங்கி வழியும். ஆன்லைன் புக்கிங்கில் காசை அள்ளி விடுவார்கள்.