
தற்போதெல்லாம் முக்கிய நடிகர்கள் செல்பி தொல்லையில் இருந்து தப்பிக்க தன்னுடன் பாதுகாவலர்களை ( ஜிம் பாய்ஸ்.) அழைத்துச்செல்வது வழக்கமாக இருக்கிறது.எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இந்த செல்பி பாய்ஸ் பண்ணுகிற அலம்பல் அராஜகமாக இருக்கும். அதுவும் கவர்ச்சி நடிகைகள் வந்து விட்டால் அவர்களுடன் ஒட்டி உரசி ..அப்பப்பா போதும்டா சாமி என்றாகி விடும்.
முன்னணி நடிகர் ஜெயம் ரவிக்கும் ஜிம் பாய்ஸ் இருக்கிறார்கள்.
இவர்களை முறைப்படுத்தி சம்பளம் கொடுக்கிற ரவியின் உதவியாளர் சம்பளம் கொடுக்கவில்லையாம். இதனால் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.












