சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு காப்பகமாக இருப்பது லிப்ரா புரடக்சன்.தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனுக்கு நல்ல மனம். சிறந்த படமாக இருந்தால் அவரே படத்தை தியேட்டருக்குக் கொண்டுசென்று விடுவார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பிக்பாஸ் கவினை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம் என இறங்கினார்.
“ஒரு நடிகை கூட நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. நான் கவினிடமே கேட்டேன். என்னய்யா ஒரு நடிகை கூட வர மாட்டேங்கிறாங்க. நீ தப்பு கிப்பு பண்ணிட்டியா என்று கேட்டேன்.
இல்ல சார் சீரியல் நடிகன்னு தயங்குறாங்கன்னு சொன்னார். அந்த மாதிரி தயக்கம் எல்லாம் இருக்கு. ஆனா வாழ்க விவசாயி படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியா நடிக்க வசுந்தரா ஒப்புக் கொண்டு நடித்ததைப் பாராட்ட வேண்டும்” என்று வசுந்திராவுக்கு ஒரு பாராட்டுரை வழங்கினார்.
அதாவது சீரியல் நடிகர்,நடிகை என்றால் இளக்காரமாக இருக்கிறது. ஆனால் அதுதான் அவர்களுக்கு கடைசி வேடந்தாங்கல் என்பது தெரிவதில்லை.அல்லது புரிவதில்லை. வாழ்க விவசாயி,!