எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலின் திரை வடிவம்தான் கலைப் புலி தாணுவின் அசுரன்.அற்புதமான கதை. தனுஷ்,வெற்றி மாறன் வெற்றிக் கூட்டணியில் வருகிற 4 ஆம் தேதி வெளியாகிறது.
வழக்கம் போல சில காட்சிகளை காவு கேட்டது.தணிக்கை.!
ஆனால் இயக்குனர் வெற்றி மாறன் சில காட்சிகளை மியூட் செய்து சரி செய்து விட்டார் அதற்கு பின்னர் U/A சான்றிதழ் வழங்கி விட்டது.
படத்தின் முன்னோட்டமே அனைத்துப் பிரிவினரையும் அசத்தியிருந்தது. இதனால் ஆக்ஷன் படமாக எதிர்பார்க்கிறார்கள்.மேலும் மஞ்சு வாரியார், பிரகாஷ்ராஜ், பசுபதி,பாலாஜி சக்திவேல்,அபிராமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.