கல்யாணி பிரியதர்ஷன்.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி ஆகியோரின் மகள். அப்பா அம்மா இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். முறைப்படி விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
கல்யாணி தற்போது தமிழ் மலையாளம்,தெலுங்கு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகால திரை வாழ்க்கை.
சுற்றி அடிக்காமல் இருக்குமா காதல் கிசு கிசு.?
பெரிய அளவிலேயே அடித்தது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் -கல்யாணி இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என்பதாக !
என்ன சொல்கிறார் கல்யாணி?
“நான் யாருடன் இணக்கமாக இருப்பேனோ அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ள முடியும்! ( இதானேம்மா உலக வழக்கமாக இருக்கு! ) ஆனால் கல்யாணத்துக்கு இன்னும் நேரம் காலம் வரவில்லை. தற்போது அவசரமும் இல்லை.
நான் யாரை விரும்புகிறேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.யார் அவர் என்பது என்னுடைய வீட்டார் ஒவ்வொருவருக்கும் தெரியும்” என்கிறார்.
வாழ்க காதல் ! வளர்க தடை இன்றி!