
சைரா நரசிம்மரெட்டியின் தம்பி பவன் கல்யான்.
ஜன சேனா கட்சியின் தலைவர்.
கடந்த சில நாட்களாக அவரைக் காணவில்லை.
இதற்கிடையில் கட்சியின் பெருந்தலைவர்களில் சிலரை பா.ஜ.க. வாரிச்சுருட்டிக் கொண்டிருக்கிறது.
அதைப்பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கட்சியின் தொண்டர்கள்.
எங்கே போனார் தலைவர்?
இதற்கிடையில் ஒரு செய்தி.
அவருக்கு தாங்க முடியாத முதுகுவலி.அதனால் ரகசியமான இடத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதே அந்த செய்தி.
பவன் கல்யாண் மற்றவர்களை தக்க வைக்கவும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியூட்டவும் இப்படியொரு நாடகத்தை நடத்துகிறார் என்பதாகவும் சொல்கிறார்கள்.
நடிகர்களுக்கு நடிப்பதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமா?












